உம்மை விட்டு தூரம் தூரம் 

உண்டாச்சு பாரம் பாரம் 

ஓடவில்லை நேரம் நேரம் 

ஒண்டியாய் நானும் பாவம்...

சோறு தண்ணி இறங்கவில்லை

சோதனையும் தாங்கவில்லை 

தூக்கம் இங்கு எனக்கு இல்லை 

துக்கம் விட்டுப் போகவில்லை...

கண்ணே உன்னை நெனச்சிக்கிட்டு

கண்ணீர் விட்டு கலங்குகிறேன்

அறையினில் உம் படம் வரைந்து- நீர்

அருகினில் என நினைத்து கொள்வேன்...

இந்த விதி பிடிக்கவில்லை 

இயற்கை சதி விடவுமில்லை 

சந்தோசம் இங்கு இல்லை 

நான் சாகாத நாளே இல்லை...

- கவிஞர் செங்கொடித் தமிழன்