கண்ணதாசன் அவர்களுக்கு கம்பன் மீது அளவு கடந்தப் பற்று உண்டு. அதனால் தான் அவருடைய படைப்புகளில் கம்பனின் கவிதைகளைச் சேர்த்து நமக்கு அளித்திருப்பர்.
ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் கண்ணதாசனிடம் கம்பராமாயணத்தை கொடுத்து இதை படித்து விட்டு, கம்பராமாயணத்தை பற்றி தவறாக எழுது என்று சொன்னார் அதற்கு கண்ணதாசன் சரி என்று சொல்லி விட்டு கம்பராமாயணத்தை முழுவதும் படித்து விட்டு அண்ணாவிடம் சென்று புத்தகத்தை மீண்டும் கொடுத்தார்
அப்பொழுது கண்ணதாசன் அறிஞர் அண்ணாவிடம், என்னால் கம்ப ராமாயணத்தை தவறாக எழுத முடியாது. ஏனென்றால் நான் காலியத் தாயின் இளைய மகன் என்று சொன்னார்
அதற்கு அண்ணா அப்போ மூத்த மகள் யார்? என்று கேட்டார், அதற்கு கண்ணதாசன் கம்பன் என்று பதில் அளித்தார்.
கண்ணதாசன் கம்பனை பற்றிச் சொன்ன ஒரு கவிதை கீழ்கண்டவாறு,
சீதை நடைஅழகும்! ஸ்ரீராமன் தோள் அழகும்! போதை நிறைந்தது என்று சொல்லி! என்னை போட்டானே மது குடத்தில் அள்ளி!
கம்பராமாயணத்தின் தாக்கத்தால் வீர அபிமன்யு என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் இயற்றிய ஒரு பாடல் பின்வருமாறு :
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்! அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்! அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்!
நானும் மலர்ந் மவர் தேன் போல் நானும் மலர்ந்தேன்! உனக்கென வளர்ந்தேன்! பருவத்தில் மாந்தேன்! எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்! இளித்தேன் இல்லாதபடி கதை முடித்தேன்.
கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன்! என ஒரு படித்தேன் பார்வையில் குடித்தேன்! ஒரு துளித்தேன் சிந்தாமல் களித்தேன்! கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்!
- கவிஞர் பு. நல்லபெருமாள்

0 Comments