என் கயிற்றைக் கட்டிவிட்டேன்.

என் உடல்

என் உயிர்

என் உடைமை

என் உறவுகள்

என் உணர்வுகள்

எல்லாவற்றையும் உரியவை ஆக்கிய என்னையே உனக்கே உரித்தாக்கினேன்.

பிறகு என்னுடையது என்றதெல்லாம் உன்னுடையது.

- கவிஞர் மீரான்தாசன்