🔴 ATTENTION READERS 📢 Website Maintenance ! Currently, the website is under maintenance. You may experience some issues or difficulties while reading. Thank you for your understanding and patience.
ஜாக்கிரதை பண கவசம் | நாகூர் செய்கு அப்துல் காதிர் | June 2024

ஜாக்கிரதை பண கவசம் | நாகூர் செய்கு அப்துல் காதிர் | June 2024

 


பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கின்ற சென்னை மாநகரில் சென்னைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதியும் ஒன்று என்னுடைய ஆய்வின் தேவைகளின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக காலை 11 மணி போல செல்ல நேர்ந்தது. தங்கி இருக்கும் இடத்தில் இருந்து யுனிவர்சிட்டிக்கு செல்ல கீழே இறங்கினேன். கடுமையான வெயில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான்.

நடந்து போனால் சற்று ஏறக்குறைய அரை மணி நேரத்தில் போய்விடலாம். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

உடனே மனதில் நிலைக்கொண்டது ரேப்பிடோ. இதுவே நம்முடைய வேலையும் எளிதாக முடிவதற்கு ஏற்றது என எண்ணி என்னுடைய ஸ்மார்ட் போனை எடுத்து ரேப்பிடோவை நான் இருக்கும் இடத்திலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பிக்கப் டிராப் செட் பண்ணிவிட்டு காத்திருந்தேன்.

ஐந்து நிமிடங்களில் சுரேஷ் என்ற ரேபிடோ ஊழியர் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் பதிவு செய்த பிக்கப் லொகேஷன் வந்து விட்டேன் என்று கூறினார். நானும் அவரிடம் ஒடிபியை சொல்லி விட்டு ஏறினேன். சிரித்த முகத்துடன் கையில் இருந்த தலைகவசத்தை என்னிடம் கொடுத்தார். "இதை போட்டுக் கொள்ளுங்கள் சார். இல்லை என்றால் நான் ரைடை கேன்சல் செய்து கொள்கிறேன் என்று சொன்னார். நான் பதிலுக்கு "ஏன் அண்ணே இவ்வளவு கோபம் தாராளமாக போட்டுக் கொள்கிறேன்" என சிரித்தப்படியும், வெயிலின் தாக்கத்தினால் இவ்வாறு அவரின் மனநிலையும் என எண்ணிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். அவர் பேச தொடங்கினார்.

சார் கோபித்துக் கொள்ளாதீங்க நான் ஏன் அவ்வாறு சொன்னேன் என்றால் உங்களை ஏத்திக் கொண்டு டிராப் லொகேஷன் இறக்கி விட 31 ரூபாய் கிடைக்கும். ஆனால் நீங்கள் தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஆயிரம் ரூபாய் எனக்கு அபராதம் விதிக்க கூடும் என்று கூறினார்.

சார் நான் ஒரு தனியார் கம்பெனியில் இரவு நேரத்தில் வாட்ச்மேனாக வேலை செய்கிறேன். என்னுடைய குடும்ப கஷ்டத்தின் காரணமாக நான் பகுதி நேரத்தில் ரேபிடோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

அரை நாளைக்கு 600 ரூபாய் ஓட்டி எடுப்பது பெரும் சாதனையாக இருக்கிறது என்று தன்னுடைய குடும்ப கஷ்டங்களையும் துயரத்தையும் என்னிடம் புலம்பியவாறு வண்டிகளை ஓட்டிக் கொண்டிருந்தார்.

நானும் அவரிடம் மனதிற்கு ஆறுதலாக பல வார்த்தைகளை பேசிக்கொண்டே வந்தேன். 

சற்றென்று ஒரு கை எங்களை மடக்கியது. யாராக இருக்கும் ஆம் அவர்கள் தான் போக்குவரத்து காவல்துறை, நாங்கள் இருவரும் தலையில் தலைகவசம் அணிந்து இருந்ததால் எங்களை நீங்கள் செல்லுங்கள் என்று அனுப்பினார். சற்றே மனதில் நினைத்து கொண்டேன் நல்ல வேலையாக நாம் தப்பித்துக் கொண்டோம்.

"பாத்தீங்களா சார்... நல்லவேளை நீங்க ஹெல்மெட் போட்டு இருந்தீங்க இல்லைன்னா இன்னைக்கு எனக்கு ஒரு ஆயிரம் ரூபா வாஸ் தான்' என சொல்லி நாங்கள் இருவரும் சிரித்த படியே சென்னைப் பல்கலைக்கழக நுழைவாயிலில் என்னை அவர் இறக்கி விட்டு சென்றார்.

அன்பர்களே தலைகவசம் உயிரையும் ஊழியரின் பணத்தையும் காக்கின்றன சற்றே கவனமாக இருங்கள்...

- நாகூர் செய்கு அப்துல் காதிர் 

Post a Comment

0 Comments