இலைகள் தான் தொடங்கின

பழுத்துதிர்ந்து சரசரத்தன 

பிறகு பூக்கள் பின்பு பிஞ்சுகள்

காய்களோடு வீழ்ந்தன கிளைகளும்

இழப்பை எண்ணி துணுக்குற்றிருக்கிறாய் 

மரம் வளர்ந்துகொண்டிருக்கிறது.

தகிக்கும் வெயில் 

புழுங்கும் வெளி 

கீற்றிடுக்கின் ஒளிவட்டங்களை 

மகள் எண்ணிக்கொண்டிருக்கிறாள்

சருகுகளோடு சடுகுடு ஆடும் 

காற்று இலைகள் உதிர்ந்திருக்கின்றன

பெருக்கி ஒதுக்கினேன் 

இலைகள் மேலும் விழ கூட்டினேன்

கிளைகளை அண்ணாந்தேன் 

தளிர்க் கொத்துக்கள் முற்றிய இலைகள்

நான் மீண்டும் மீண்டும் கூட்டினேன்

பெருக்கினேன் 

மரமோ கழித்துக்கொண்டேயிருக்கிறது.

- கவிஞர் சூ. சிவராமன்