Nagore Puranam
முதிர்கண்ணிப் பா | செங்கொடி தமிழன் | June 2024

முதிர்கண்ணிப் பா | செங்கொடி தமிழன் | June 2024


பூக்கள் வாடும் நேரம் வண்டுதான் மொய்க்குமா? பூவும் வாடிப்போனால் தென்றல் வாசம் வீசுமா?

கண்ணீரை துடைக்க இங்கு இரு கரங்கள் கிடைக்குமா? அந்த வரங்கள் வாழ்வு முடியும் முன் எனக்கு வாய்க்குமா?

நிலவாக நானும் தேய்கிறேன் இரவாக நாளும் வாழ்கிறேன் விடியாதோ ? விடை ஏதோ? விடியல் தான் கிடையாதோ?

கை விரலில் கோலம் வாய்த்ததே கால் விரலில் என்று வாய்க்குமோ கழுத்தில் தாலி ஏறுமோ? இல்லை கடைசி கயிறு ஆகுமோ..?

நிலவாக நானும் தேய்கிறேன் இரவாக நாளும் வாழ்கிறேன் ஒளி மாலை வாராதோ? தோள் மாலை சேராதோ?

பூக்கள் வாடும் நேரம் வண்டு தான் மொய்க்குமா? பூவும் வாடிப்போனால் தென்றல் வாசம் வீசுமா?

கண்ணீரை துடைக்க இங்கு இரு கரங்கள் கிடைக்குமா? அந்த வரங்கள் வாழ்வு முடியும் முன் எனக்கும் வாய்க்குமா?

- செங்கொடி தமிழன்

Post a Comment

0 Comments