தாய்மை | வடகரை ரஹ்மத் மைந்தன் ஃபரீது வாஹிதி | June 2026

 


எளிதில் அடைந்திட இயலாத பொருள் கிடைத்து விட்டால் தவத்தின் தரத்தை உணர்ந்திட உதவும் !

கருவில் சுமைகளில் வலிகளும் கைகோர்த்து வதைத்த போதும் தவத்தை கலைத்திடாத தாய்மை !

நொடியில் கனம் கூடும் வேளை விரைவில் பாரத்தை இறக்கிட முயலும் மனித நிலைகளில் !

கனம் கூட கவனிப்பும் பாதுகாப்பும் கருணையும் பலமானது பாசமான அன்னையர் வயிற்றுக் கருவிற்கு !

வியப்பில் உச்சம் ஒவ்வொரு கருவின் ஆச்சரியம் மனித சிந்தனைக்கு உயிராகும் !

ஈன்றெடுத்த சுமைகளை இமைமூடாது பாதுகாக்கும் பாசமும் பண்பும் பண்பாடுகளும் சொந்தமானது தாய்மைக்கே !

வயதானாலும் வார்த்தையிலும் வாழ்விலும் நம்மை விட்டுக்கொடுக்காத உயரிய உள்ளமே தாய்மை !

உலகில் எவராலும் முழுதாய் வர்ணிக்க என்றுமே வார்தையை சொல்லிட இயாத உறவு தாய்மை !

கருவில் சுமக்கையில் சுகமாக எண்ணியவளே உலகில் உயர்வாய் நாம் வாழ எண்ணிட இயலா கனவுகளை சுமப்பதும் தாய்மை !

- வடகரை ரஹ்மத் மைந்தன் ஃபரீது வாஹிதி 

Published in Nagore Puranam June month magazine 2024

Post a Comment

0 Comments