Nagore Puranam
இறகுகள் இல்லையானால்.. | கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி | September 2024

இறகுகள் இல்லையானால்.. | கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி | September 2024

 


சுமப்பதை சுகமாய் ஏற்று 

வலிகளை வரமாக உணர்ந்து 

அசைவுகள் ஆனந்தம் அளித்து

உதைத்தலை உயர்வாக கருதி 

உணவை உனக்காக தவிர்த்து

கசப்பானதை கருவுக்காக உண்டு

வேகமாய் நடப்பதை குறைத்து

தூக்கத்தில் துரிதமாகத் திரும்புவது

பெற்றெடுக்க பெரும் துயர் கண்டு 

தன் நிலையை தானமாகத் தந்தவளே!

தாய் தாயின் அன்பு மட்டும் இல்லையானால்? 

மண்ணில் மனித இனம் ஏது...

- கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி

Post a Comment

0 Comments