Nagore Puranam
தொல்காப்பியம் - ஓர் பார்வை | நாகூர் எஸ்.ஏ.கே @ செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் | September 2024

தொல்காப்பியம் - ஓர் பார்வை | நாகூர் எஸ்.ஏ.கே @ செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் | September 2024



தொல்காப்பியம் தமிழ் மொழிக்குரிய இலக்கணத்தைக் கூறும் பழம்பெறும் முதன்மை நூலாகும். இதன் ஆசிரியர் இலக்கணப் புலவரான தொல்காப்பியர் ஆவர். இவரது காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு எனச் சொல்லப்படுகிறது. தொல்காப்பியத்தை இவர் நிலம்தரு திருவில் பாண்டியன் அரசவையில் வெளியிட்டார் என்பது வரலாற்று அறிஞர் கூற்று.

இதில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியது. அதிகாரம் என்ற சொல்லுக்கு பகுதி என்று பொருள்படும். இருபத்து ஏழு இயல்களாக வகுக்கப்பட்டுள்ளது. நூல் மரபில் தொடங்கி மரபியலில் முடியும். இயல் என்றால் அத்தியாயம் எனப்படும். ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் உள்ளன.

எழுத்ததிகாரம்:

எழுத்ததிகாரம் எழுத்துக்களுக்குரிய இலக்கணத்தை பேசுகிறது. இதில் நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது அத்தியாயங்கள் இடம் பெறுகின்றன. தமிழ் எழுத்துகள் எப்படியெல்லாம் பிறக்கின்றன என்பதனைக் குறிப்பது பிறப்பியல் அத்தியாயம் ஆகும். மனிதனுக்கு ஆடை முக்கியம், ஆடைக்கு நூல் மிகவும் முக்கியம். இதனைப் போன்று மொழிக்கு எழுத்துகள் மிக மிக முக்கியம் என்ற அடிப்படையில் நூல் மரபு எனப் பெயர் பெற்றது எனலாம்.

புணரியல் என்ற சொல்லுக்கு புணர்ச்சி என்று பொருள். புணர்ச்சி என்பது இணைவதைக் குறிக்கும். அதுபோல எழுத்துகள் எப்படியெல்லாம் ஒன்றோடு ஒன்று இணையும் என்பதனைப் புணரியல் விவரிக்கும். உருபுப் புணர்ச்சி, சாரியைப் புணர்ச்சி ஆகியவை கூறப்படுகின்றன.

புணர்ச்சி இலக்கணங்களைத் தொகுத்துக் கூறுவதே தொகை மரபு ஆகும். மேலும் எழுத்துகள் ஒன்றோடு ஒன்று இணைவதைப் பொதுப்புணர்ச்சி என்றும், சிறப்பாக இணைவதைச் சிறப்புப் புணர்ச்சி என்றும் கூறுவர். வேற்றுமை உருபுகள் பெயர்களோடு சேரும் போது ஏற்படும் புணர்ச்சி விதிகளைப் பற்றி விவரிப்பது உருபு இயல் ஆகும். வேற்றுமை உருபுகள் எட்டு வகைப்படும். அவை பெயர், ஆல், கு, இன், அது, கண், விளி எனப்படும்.

எழுத்ததிகாரத்தில் ஏழாவது அத்தியாயமாக இடம் பெறுவது உயிர் மயங்கியல் ஆகும். அதாவது ஓர் எழுத்து இன்னோர் எழுத்தாக மாறுவது.

"சாவ என்னும் செயஎன் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே"

(தொல்காப்பியம் -209)

- நாகூர் எஸ்.ஏ.கே @ செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் 

Post a Comment

0 Comments