மனைவி அமைவது
பாக்கியம் பாக்கியம்
மனத்துள் மகிழ்ச்சி
நிறைந்து விடும்- உன்
மக்கட்செல்வம் தக்க
முறையினில் வளர்ந்து
புகழினை எட்டிவிடும்.
உனைவீண்பழிக்கு
ஆளாக்காதே
ஒருகுற்றமும் நீ
சொல்லாதே - அவள்
ஒரு சில குற்றம்
செய்து விட்டாலும்
உண்மை உயர்குணம்
மறவாதே.
கணவன் மனைவி
உறவில் பகையைக்
கூட்டிவைப்பது
சந்தேகம் - அதைக்
கனவிலும் எண்ணிப்
பார்த்துவிடாதே
கண்டிப்பாய் சிதையும்
உன்தேகம்,
மனைவியைக்
குறையாய் சொல்லாதவனே
மக்கள் மத்தியில்
தலைநிமிர்வான்- அவன்
மாறா ஏறு
என்பதைப்போல
மகிழ்ந்து வெற்றி நடையிடுவான்,
- கவிப்பேரொளி நீரை அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப்)

0 Comments