ஜனநாயக இந்தியாவில் வாக்குறுதிகள் வெறும் வாய் வார்த்தைகளாக மட்டுமே வலம் வருகின்றன. வாக்குறுதிகள் வசமாகும் வரை வசைபாடும் வாய்களுக்கு பஞ்சமில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. ஏகாதிபத்திய இந்தியாவின் அரசியல் தலைவர்களின், நேற்றைய வாக்குறுதிகள் இன்றைய பொய்களாகவும், நாளைய எதிர்பார்ப்பாகவும் மட்டுமே ஜனநாயக மக்களின் நிலையாக உள்ளது.
ஒருமுறை மக்காவில் இருந்து ஹுதைபதுல் யமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவருடைய தந்தையும் மதினா நோக்கி புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை, மக்கத்து மக்கள் சூழ்ந்து கொண்டு அவர்களிடத்தில், நீங்கள் இருவரும் மதினா சென்று அங்கு இருப்பவர்களுடன் சேர்ந்து எங்களை எதிர்க்க போகின்றீர்களா? என்று அவர்களைத் தடுத்து, நீங்கள் இருவரும் செல்லக்கூடாது என்று எதிர்த்தனர். உடனே . .அவர்கள் இருவரும் நாங்கள் மதினாவில் வாழ்வதற்காக செல்கிறோமே தவிர, உங்களுக்கு எதிராக ஒரு நாளும் போர் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி அளித்ததன் பின்னர் மதினாவிற்கு புலம்பெயர்கின்றனர். அவர்கள் சிறிது காலத்திற்கு பின் மதினா மாநகரில் கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், மக்கத்துக் காஃபிர்களை எதிர்த்து பத்ரு போருக்கான பிரகடனம் செய்து மதினா வாசிகளை ஒன்று சேர்க்கிறார்கள் அவ்வேளையில் ஹூதைபத்துல் யமான் (ரலியல்லாஹு அவர்கள் நபிகளாரிடம், நாங்கள் மதினா நோக்கிப் புலம்பெயர்ந்து வரும் போது. மக்கத்து வாசிகள் எங்களைத் தடுத்தார்கள் என்று மேற்கண்ட சம்பவத்தை கூற..நபிகளார் உடனே ஹூதைபத்துல் யமான் (ரலி) அவர்களிடம் நீங்கள் ஒரு வேளை காஃபிர்களிடத்தில் வாக்குறுதி தந்திருந்தாலும் நீங்கள் முஸ்லிமாக இருப்பதனால் அந்த வாக்குறுதியினைக் காப்பாற்றுங்கள் என்று பணித்ததுடன், இருவரையும் போருக்கு வர வேண்டாம் என்று கூறி வாக்குறுதி பற்றி முக்கியத்துவத்தை அறிவுறுத்துகின்றார்கள். ஆகவே வாக்குறுதிகள் என்பது வெறும் வாய்ச் சொற்களோ, அக்கணத்தில் தப்பிப்பதற்கான அற்ப வழிகளோ இல்லை!! மாறாக வாக்குறுதிகள் என்பது நம் தலைக்கு மேல் தொங்கும் வாள்களைப் போன்றது. வாக்குறுதிகள் மீறுவது மனிதத் தன்மைக்கு எதிரானது.
ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்!!
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்!
மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்!!!
வாழ்க ஜனநாயகம்!!
வளர்க இந்தியா!!

0 Comments