எழுந்து வா இளைஞனே !
துடிப்புடன் செயல்படு நாளைத் தலைவன் நீ !
இளைஞர்களின் இதயத்துடிப்பு
இளைய தலைமுறைகளின் நாடித்துடிப்பு
இளைஞர்களின் புரட்சிப் படைப்பு
இளைஞர்களின் நாளைத் தேசத்தின் விடிவெள்ளி
புகைந்து விழுந்து
அழியாமல் இளைய தலைமுறைக் காத்திட
நாளை வரலாற்றுச் சாதனைப் படைத்திட
தேசமே உங்கள் கையில் !
கொட்டும் மழையில் வீசட்டும் இசைகள்
புரண்டு ஓடும் நதிகளும்
புரட்டிப் போடும் படைப்புகள்
சீரும் சிங்கமாய் சினம் கொண்ட பேச்சுகள்
சமுதாயத்தில் புரட்சிகள் படைக்கட்டும்
வளர்ச்சியின் பாதையில் வளரட்டும் !
இளைஞர்கள் சீர் கெட்டுப் போகாமல்
சீர்திருத்தத்துடன் வாழ்ந்திட
சிகரம் தொட்டு வாழ்ந்திட
சிறப்பாக உணர்ந்திட வாழட்டும் இளைஞர்கள்

0 Comments