கருணையின் மழையே !

தவிப்போருக்கு தஞ்சமே !

வீதியில் துடிக்கும் குழந்தைகளை

அரவணைத்துக் கொண்ட தாய் உள்ளமே !

இழி சொற்களையும்

வலி சொற்களையும்

தன் வலிகளைச் சுமந்த அன்னையே !

நோபல் பரிசுகளிலும்

மனிதநேயத்திலும் உயர்த்திய

உள்ளம் கொண்ட தாயே !

உயரிய பாரத ரத்னாவையும்

உயிர்களையும் காத்த

உதவிக்கரமே !

வெளிநாட்டில் வந்த

வெள்ளைப் புறாவே !

சேவகனாய் வந்தாயோ !

செவிகளுக்கு மருந்தாய் வந்தாயோ !

அலைகடலாய் வந்தாயோ !

அன்பை மலரச் செய்தாயோ !

கருணைத்தேவதையாய் வந்தாயோ

கருணையில் கரைத்தாயோ ! 

ஒளியாய் விளக்காய் வந்தாயோ !

பலருடைய முகத்தை மலரச் செய்தாயோ !

தியாகத்தின் திரு உருவமே !

தரணி போற்றும் உன் முகம் !