எங்கெங்கிருந்தோ வந்தோம்,ஒரே அறையில் ஒன்றானோம்.
"வா போ" என்று தொடங்கிய நட்பு, இன்று "பீப்" போடும் அளவிற்கு உரிமையாக மாறியது.
சாப்பாட்டு தட்டுக்காக சண்டை போட்டோம், அதிகம் சாப்பிடுவது யார் என்று போட்டிப் போட்டோம்.
தேய்த்து வைத்த சட்டையைத் தேடினோம்,மறுநாள் நண்பன் அணிந்து வந்ததைக் கண்டு அறிந்தோம்.
நண்பன் காதலியிடம் பேசும்போது குறுக்கிட்டோம்,
அவனுக்கும் அவளுக்குமிடையே சண்டை வந்தபோது அவனைத் தேற்றினோம்.
வீட்டிலிருந்து ஒரு மாதத்திற்கு கொடுத்து விடும் பலகாரங்கள், ஒரே நாளில் காலியாகி விடும்.
இரவு நேரப் பசிக்கு பலியானது, நண்பனின் ரகசியப் பெட்டியில் இருந்த தின்பண்டங்கள்.
வேறு ஊரிலிருந்து வந்த நண்பனின் வட்டார மொழியைக் கலாய்த்தோம், பின்னர் நாமும் அதையே பேசிப் பழகிக்கொண்டோம்.
பெற்றோர் வருவதற்காக அறையைச் சுத்தம் செய்தோம், வார்டன் கண்ணில் படாமல் இருக்க போராடினோம்.
விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லும்போது அழுக்கு ஆடைகளையும் எடுத்துச் சென்றோம்.
அம்மாவின் முதல் கேள்வி,"இது யாருடைய சட்டை?" என்பதுதான்.
முதலில் விடுதி உணவை வெறுத்தோம், பின்னர் அதற்கே பழகிக்கொண்டோம்.
ஆரம்பத்தில் சீனியர்களிடம் சண்டை போட்டோம், பின்னர் அவர்களே நல்ல நண்பர்களானார்கள்.
ஒரே தலையணையில் பல தலைகள் உறங்கின, தலையணையின் உண்மையான உரிமையாளரின் தலை தரையில்தான் இருந்தது.
நமக்கென்று உரிமை கொண்டாட இருந்த ஒரே பொருள், நம் உள்ளாடை மட்டும்தான்.
ஆரம்பத்தில் வீட்டிற்குச் செல்ல விரும்பினோம், கடைசியில் விடுதியை விட்டு செல்லும் போது கண்கள் கலங்கின.
விடுதி ஒரு தங்கும் இடம் மட்டும் அல்ல, வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் நட்பையும், சந்தோஷத்தையும், மறக்க முடியாத தருணங்களையும் கொடுத்த ஓர் உலகம்.

2 Comments
Peaceful remember
ReplyDeleteReading
ReplyDeleteStaying
Living
That hostel life