நேற்று வந்த ஒருவனிடம்

நன்றாய்ப் பேசினான்

நினைத்தவாறு புகழ்மொழிகள்

அள்ளி வீசினான்

வேற்றிடத்தை அவன் நாடிச்

சென்ற பின்னரே

வேண்டாத பொய்க்கதைகள்

எடுத்துக் கூறினான்

காற்று வாக்கில் இந்தச் செய்தி

அவனிடம் சேர

கடுங்கோபம் கொண்டு இதை

எதிர்த்துப் பேசினான்

மாற்றுவழி தெரியாமல்

மன்னிப்புக் கேட்டான்

மனக்கசப்பில் இந்த உறவு

முடிந்து போனது

அறங்கூறான் என்றநிலை

இருப்பினும் கூட

அவனுக்கு அதுசிறப்பு

முழுவதும் இல்லை

புறங்கூறா திருப்பதுதான்

மிகுந்த புண்ணியம்

போற்றிடு நீ மனதுக்குள்

புகுந்திடும் சொர்க்கம்.