" ஐ" போன் வேனுமின்னு
அன்பு மகன் அடம் பிடிக்க
" ஐயோ வேனாமின்னு"
அந்தத் தாய் மண்டியிட
கருவுள வந்த புள்ள
கால் கடுக்க நிக்குறியே
மனசு ஒடைஞ்சி கேக்றன்டா
மகனே நீ வந்து விடு
புள்ள வரம் வேனுமின்னு
பல வருஷம் நானிருந்து
தவமா கிடந்து பெத்த புள்ள
தவிச்சி வந்து நிக்குதே!!
மனசே சரியில்ல
மல உச்சி ஏன் வந்த?
தவறி நீ விழுந்தா
தாய் மனசு தாங்காதே.
" ஐ" போனு வெலய விடத்
தாயன்பு வெல அதிகம்
உங்கண்ணு
கலங்கி நின்னா...
" ஐ " போனா தொடைச்சிவிடும்!
உன் வயிறு பசித்திருந்தா
அது வந்தா சோறு போடும்
வந்துடு ஆசை மகனே
கண் கலங்கி நிக்குறேன்டா
பத்து மாசம் சொமந்தவயிறு
பரிதவிச்சி ஏங்குது
ஐயோ மகனே
தனியா போகாம
ஐயா வ இழுத்துட்டு போய்ட்டீயே.....
நான் மட்டும் இருந்து
என்ன செய்ய?
நானும் வரேன் என் மகனே!

0 Comments