2018 ஆம் காலகட்டத்தில் டிக் டாக் செயலி மூலம் பலர் சமூக வலைத்தளங்களில் சினிமாவில் இடம் பெற்ற வசனம், பாடல் மற்றும் ஆடல் போன்றவற்றின் மூலம் பிரபலமான சமயம். பின்பு அவைத் தடைசெய்யப்பட்டது. நான் தற்போது செய்திக்குள் வருகிறேன். பள்ளிகளும் கல்லூரிகளும் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், பண்பாடு, சமூகப் பொறுப்பு, மனிதநேயம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, கலை உணர்வு போன்ற உயரிய பண்புகளையும் வளர்க்க வேண்டிய நிறுவனங்களாகும்.
அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மாணாக்கர் மனதில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. காலம் கடந்தாலும் சொல்லிப் பெருமைப்படுத்தும் பேச்சாக இப்படி இருக்கும்.....A.P.J. அப்துல் கலாம் ஐயா கிட்ட நான், ஆண்டு விழாவில் மூன்றாம் பரிசை அவரின் கரத்தால் பெற்றேன். இதன் வரிசையின் தமிழ்த்துறை இலக்கிய மன்ற விழாவில் கலைஞர் கருணாநிதி, அறிவியல் கண்காட்சி போன்ற நிகழ்வில் மயில் சாமி அண்ணாதுரை, இறையன்பு ஐ.ஏ.எஸ் போன்ற எண்ணற்ற அறிஞர் பெருமக்களைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்தோம்.
இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரி விழாக்களில் முன்னர் சொன்ன டிக் டாக் செயலி மூலம் பிரபலமான தொட்டுத் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடகர்கள், தொலைக்காட்சிப் பிரபலங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் உள்ளிட்ட சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது அதிகரித்துள்ளது.
நவீன சமூகத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தும் ஊடகமாக விளங்குகிறது சினிமா. ஒரு திரைப்படத்தின் காட்சி, வசனம், பாடல், உடை, நடத்தை, வாழ்க்கை முறை போன்றவை பொதுமக்களின் ரசனை மற்றும் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு இளைஞர்களின் சுயசிந்தனை முற்றிலும் இழந்துள்ளது என்பது மறுக்கத்தக்கது.
சினிமா மூலம் நல்ல யோசனைகள் மக்கள் மத்தியில் நிகழ்ந்தாலும் பாதிப்புதான் அதிகமாகவும் ஆதிக்கமாகவும் உள்ளது.
கல்வி நிறுவனங்கள் விழாக்களுக்கான விருந்தினர்களைத் தேர்வு செய்யும்போது பலவிதமான துறைகளைச் சார்ந்த பெருமக்கள் உள்ளனர். குறிப்பாக கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், நீதித்துறைச் சார்ந்தவர்கள், நிர்வாகிகள், சமூகப் பணியாளர்கள், தொழில்முனைவோர், விளையாட்டு வீரர்கள், கலை மற்றும் பண்பாட்டுத்துறை அறிஞர்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முன்னாள் மாணவர்களில் சாதனைப் படைத்தவர்கள்.
இத்தகைய பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் உலகப் பார்வையை விரிவுபடுத்துவதுடன், அவர்கள் சாதனைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் விளங்கி இன்றைய இளைய சமூகம் சிகரம் தொடும். மக்கள் சனாதிபதி அப்துல் கலாம் ஐயா சொன்னது போல் இந்தியா நிச்சயம் வல்லரசு ஆகும்.

0 Comments