நேபாளம் நெருப்பின் பாலமாய் ஆனது

கொதித்து எழுந்திட கோரவும் தாண்டிட

பல உயிர்கள் அடித்துச் சென்றிட இதயம் வெடிக்கிறது

தத்தளிக்கும் உடல் துடிக்கின்ற உயிர் அடித்துச் செல்கிறது

பொருள் என்ன ? செல்வம் என்ன ?

உறவுகள் என்ன ? உடைமைகள் என்ன ?

எல்லாம் வெறுமனையானது

துயரமான நிகழ்வுகள் துயரத்தை ஏற்படுத்தியது

துண்டு துரும்பில்லாமல் துடைத்துச் சென்றது

ஆங்காங்கே குழந்தையினால் அழுகுரலும்

கண்ணீரைச் சிந்துகிறது.

பொருளை இழந்தால் வாங்கிவிடலாம்

செல்வத்தை இழந்தால் வாங்கிவிடலாம்

உடைமைகளை இழந்தால் வாங்கிவிடலாம்

உயிர்களை இழந்தால் வாங்க முடியுமா ?

மனிதனை மனிதன் நேசித்துப் பாருங்கள்

இயேசு சொல்வதை நினைத்துப் பாருங்கள்

அழியும் செல்வத்துக்காக நீங்கள் தேடுகிறீர்கள்

அழியாத ஆத்மாவைக் காத்துக் கொள்ளுங்கள்

அன்பு இரக்கத்தையும்

மன்னிப்பையும்

மன்னித்து வாழுங்கள்

இருப்பதைப் பகிர்ந்து வாழுங்கள்

மனம்போல் வாழாதீர்கள்

நல்ல மனங்களாய் வாழுங்கள்

இயற்கைக்கு முன்னால்

ஒன்றுமில்லை பின்னால்

பணிவோடு வாழுங்கள்

நல்லப் பணிகளைச் செய்யுங்கள்