பாடல் :

முதுவிண் பேரதிர்வுத் தோற்றுவாய்த் தோன்றலின்

ஒருமத் தின்கண் யான்உளேன்; நுண்துளி

அடிவான வரம்பின்கண் நிலைஇய நினக்கு

உரைப்பது யாதெனில்; மன்னுயிர் இனமொன்றின்

இன்றிய மையாமைகளுள் மாந்தரி யல்புக்குட்பட்ட

உள்ளக் கிளர்ச்சியின்கண் எளியநல் வாழ்வு

திளைத்துவரும் நீ; அற்பவாவிற்கும் மட்டற்ற

சுயத்துய்ப்பிற்கும் ஆட்படாது அரண்செய்!

இந்நொடி வாழ்பனுவலின் குறிக்கோளாக்கி

வென்றெனைச் சாரும் பொழுது

தொலையிலில்லை.

விளக்கம் :

பேரண்டம் - முதுவிண்

பெருவெடிப்பு - பேரதிர்வு

தொடங்குதல் - தோற்றுவாய்

முதல் புள்ளி - ஒருமத்தில்

நான் - யான்

துகள் அடிவானம் - நுந்துளி அடிவானம்

எல்லையில் - வரம்பின் கண்

இருக்கும் - நிலையிய

உனக்கு - நினக்கு

சொல்வது - உரைப்பது

என்னவென்றால் - யாதெனில்

உயிர்கொண்ட ஒரு இனத்தின் - மன்னுயிர் இனமொன்றின்

அடிப்படைத் தேவைகள் - இன்றியமையாமைகளை

மனிதர் இயல்புக்கு உட்பட்ட - மாந்தர் இயல்புக்குட்டபட்ட

உணர்சிகளை - மனக்கிளற்சிகளை / உள்ளக்கிளற்சிகளை

அனுபவித்து சாதாரண வாழ்க்கையை - எளிய நல்வாழ்வு திளைத்து வரும் நீ

அற்ப ஆசைக்கும் - அற்பவாவிற்கும்

அளவில்லா - மட்டற்ற

சுய இன்பம் - சுய துயப்பு

அடிபணிந்து விடாமல் - ஆட்படாது

காத்துக்கொள் - அரண்செய்

இந்த நொடி - இந்நொடி

வாழ்க்கை புத்தகம் - வாழ் பனுவல்

நோக்கம் - குறிக்கோள்

வென்று என்னை வந்து சேரும் - வென்றெனைச்சாரும்

நேரம் - பொழுது

தூரம் இல்லை - தொலையில்லை