மகளிர் தின வாழ்த்துகள் ! | கவிஞர் ஜான் பீட்டர் | March 2026

 


பூத்த பூவின் மணம் வீசுகிறது.

மங்கையரின் எழுச்சி மலர்கிறது.


மங்கையரின் சமநிலை பிறக்கிறது.

அவளின் மனம் விண்கலமாய் 

விண்ணில் பாய்கிறது.


மங்கையரின் வீரம்.

நிலவையே தொட்டு பார்த்தது.

வீர மங்கையரின் வான் உயர்ந்து பறக்கிறது.


புயலின் வேகம் புழுதியைக் கிளப்புகிறது.

மின்னல் வேகம் கண்ணைப் பறிக்கிறது.


மழையின் வேகம் 

அசுத்தங்களை அடித்துச் செல்கிறது.

பெண்ணின் உழைப்பின் வேகம் 

குடும்பத்தையே உயர்த்துகிறது.  


சாதனை படைத்து சாகசம் செய்து.

மங்கையரின் புரட்சி வெடிக்கிறது.


விளையாட்டுத்துறையில் வென்று.

தங்கத்தின் தங்க மகளாய் ஜொலிக்கிறது.


பெண்களின் புனித தன்மை உயர்ந்து.

பல துறையில் சிகரம் தொட்டு சிறந்து நிற்கிறது.


கவிஞர் ஜான் பீட்டர்

Published in Nagore Puranam March month magazine 2026

Post a Comment

0 Comments