கலர்ஃபுல் செய்யுள் | செங்கொடி தமிழன் | May 2024


காதல் இது என்ன மாயாஜால மந்திரமா? எல்லாம் இங்கு மாறி போனதே!

நிலவு ரெண்டாய் ஆக நீ தான் காரணமா? உலகம் கூட குழம்பி போனதே!

மழையெல்லாம் மேக குடை பிடிக்குதே ! வெயில் எங்கும் வேர்த்து கொட்டுதே!

உன் விழியெல்லாம் வான வில்லெடுத்து என் நெஞ்சிலே பச்சை குத்துதே!

நிலவும் உந்தன் நிழல்கள் ஆனதே ! அந்த நிழலும் புதிய நிறங்கள் ஆனதே !

என்னென்னவோ என்னுள் மாற்றம் கண்டதே! நினைவெல்லாம் நீயே ஆனதே!

பிரபஞ்சமும் உன்னில் தஞ்சம் கோருதே! பிரம்மனும் பிரம்மித்து போனதே !

காதல் உன்னால் கடவுள் ஆனதே ! திருநாமம் உந்தன் பெயரும் ஆனதே !

காதல் இது என்ன மாயாஜால மந்திரமா? எல்லாம் இங்கு மாறி போனதே!

நிலவு ரெண்டாய் ஆக நீ தான் காரணமா? உலகம் கூட குழம்பி போனதே!

- செங்கொடி தமிழன்

Published in Nagore Puranam May  month magazine 2024

Post a Comment

0 Comments