Nagore Puranam
பல் பாதுகாப்பு | மருத்துவர். நீ. சாகுல் கமீத் | September 2024

பல் பாதுகாப்பு | மருத்துவர். நீ. சாகுல் கமீத் | September 2024



இறைவன் கொடுத்தவற்றில் அழகான மற்றும் மிகவும் கடினமான ஓர் உறுப்பு என்றால் அது நம் பல் தான். உடம்பின் அத்தியவசிய தேவையான சத்துகள் நமக்கு கிடைப்பதற்கு மூலக் கூறாய் அமைந்திருக்கிறது.

அதுவே நம் உணவு செரிமானத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. மேலும் அது முக அழகையும் அமைப்பையும் தருகிறது. அதனை நாம் கெடாமல் பாதுகாக்க வேண்டும்.

சுத்தம்:

பற்களை பற்பசைகள் மற்றும் பற்குச்சிகள் கொண்டு பல் தேய்மானம் ஏற்படாமல் சுத்தம் செய்வதே முதல் பேணிக்கையாகும். அதுவே நம் பற்களில் சொத்தை பற்கரைகள் ஏற்படாமல் தடுக்கும் முறையாகும். அதுவே ஈறுகளையும் பேணிப் பாதுகாக்கும்.

சத்தான உணவு பொருள்கள்:

பற்களில் வலுவை அதிகப்படுத்துவது கால்சியம் எனும் மூலப்பொருள். அவை மிகுந்த உணவான பால், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற உணவுகளை மேற்கொள்ளவும். மேலும் அவை எலும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். பற்சொத்தை அல்லது ஈறு நோய் தென்படுமேயானால் அவற்றை பாதுகாக்க உதவும்.

பழக்கவழக்கம்:

புகையிலை மற்றும் பாக்கு உபயோகிப்பது பல் & ஈறு போன்றவைகளை பாதிக்கும். மேலும் அவற்றை பயன்படுத்துவதால் பற்கறைகள் ஏற்படும். அதனால் நம் அழகும் பாதிக்கப்படுகிறது. எனவே அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு.

- மருத்துவர். நீ. சாகுல் கமீத்

Post a Comment

0 Comments