மெய்ப்பட செய்திட வேண்டும்
மெய்சிலிர்க்க வாழ்ந்திட வேண்டும்
நறுமணமாய் வீசிட வேண்டும்
நல் உறவாய் வாழ்ந்திட வேண்டும்
அறிவு கண்ணைத் திறந்திட வேண்டும்
அகந்தை உள்ளத்தை அகற்றிட வேண்டும்
உனக்கான அங்கீகாரத்தை அடைந்திட வேண்டும்
திறமை என்னும் தீப்பொறியாய் உயர்ந்திட வேண்டும்
உள் என்னும் தீக்கரையை அகற்றிட வேண்டும்
மின்மினி பூச்சிகளாய் ஒளித் தர வேண்டும்
மிதக்கும் தக்கையாய் மீன்களை இழுத்திட வேண்டும்
வறண்ட நிலத்தை உழுதிட வேண்டும்
செழிப்புடன் நீ செயல்பட வேண்டும்
சிறந்த மனிதனாய் வாழ்ந்திட வேண்டும்

0 Comments