எழுத்துப்பிழை நீக்கம் 

பயிற்சி


1. காய்கறி அரிந்து சமையல் செய்தாள். 

    தகவல் அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து சென்றனர்.


2. புளிய மரத்தை அரத்தால் அறுத்தனர். 

     ஒளவையார் அறம்செய விரும்பு என்றாள்.


3. காகங்கள் ஒன்று கூடி இரை உண்ணும். 

    இறைவன் மிகப் பெரியவன் என்பதனை உணர்ந்தான்.


4. ஒரு கையில் புத்தகமும் இன்னொரு கையில் எழுதுகோலும் இருந்தன. 

       ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் என்று கூறுகிறது குறள்.


5. அடுப்புக் கரியால் சுவரில் கிறுக்காதே எனக் கண்டித்தாள். 

    ஒரு கிலோ ஆட்டுக் கறி ரூ. 500/- என்றார்.


6. இரத்தக்கறை படிந்த சட்டையால் சுவாதி கொலைவழக்கில் திடீர் திருப்பம். 

 கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தல் நன்மைதரும் என்றார் மருத்துவர்.


7. மல்லிகைக் கொடி வீட்டுக் கூரைமேல் படர்ந்தது. 

    மணப் பெண்ணுக்குக் கட்டாயம் கூறைப் புடவை வாங்க வேண்டும்.


8. சாமியார் வேடம் தரித்துக் கொள்ளையர்கள் கைவரிசை.                     கைத்தறியில் நெய்த பட்டுப் புடவைகள் கண்காட்சியில் இடம் பெற்றன.

9. அவருக்கு என்ன குறை? அவரிடம் தான் தோப்பும் துரவும் இருக்கிறதே. 

         சமணத் துறவிகள் மலைக்குகையிலும் வாழ்ந்தனர்.


10. குதிரைகள் நிரைநிரையாகக் கட்டப்பட்டு இருந்தன. 

    ஐம்பது கிலோ நிறையுள்ள அரிசி மூட்டையை பல்லால் கடித்துத் தூக்கினார்.


11. பரி மீதேறி மாப்பிள்ளை பவனி வந்தார். 

      குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அமைச்சரின் பதவி பறிபோனது.


12. கோட்டூர்புரம். இராஜா அண்ணாமலைபுரம் முதலிய பகுதி களில் வெள்ளம் புகுந்தது.

        கரம் சிரம் புறம் நீட்டாதீர்.


13. மாரன் அம்புகள் ஐந்து வகைப்படும். 

      முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மறைந்தார்.


14. அவள் நன்றாகப் பாடினாள்.

      அவல்பொரி உண்டபின் தண்ணீர் குடித்தான்.


15. முகம்மது நபி (சல்)யைக் கொல்ல முயன்றவன் கைகள் அறுந்து அல்லல்பட்டான். 

  அள்ளல் நிறைந்த நிலப்பகுதியில் சிவப்புநிற ஆம்பல் பூக்கள் மலர்ந்தன.


16. கொக்குத் தனது கூர்மையான அலகால் மீனைக் கொத்தியது.             அளகைப் பொறித்த கொடி இளையோன் (திருவிளையாடல் புராணம்). 

       அழகு மயில் தோகை விரித்து ஆடுகிறது.


17. இறை என்பது ஆணும் அன்று; பெண்ணும் அன்று; அலியும் அன்று.     வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு உணவும் உடையும் அளித்து உதவினர்.


18. புயல் வீசும்போது கடலின் அலைகள் ஓங்கி உயரும். 

    அளையில் உப்பிட்டுக் கலக்கினாள். நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைத்தார்.


19. பனித்துளிகள் ஆலிபோல் படிந்திருந்தன.

     ஆளிக்கொடி ஏந்திச் சென்றனர்.

     'ஆழி சூழ் உலகு' சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற புதினம் ஆகும்.


20. பாரதிதாசன் ஆல் என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.

      ஊரடங்கு உத்தரவால் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை.

  குடிநீர்த் தட்டுப்பாடு நீங்க ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப் படும் என்று அமைச்சர் கூறினார்.


21. வாழை மரத்தின் இலை, பூ, காய் முதலியவை நமக்குப் பயன் படுகின்றன.

   உடல் எடை அதிகமாக உள்ளதால் சற்று இளைக்க வேண்டும் என்றார்.

        ஒரு நூல் இழை அளவுகூட எங்களிடம் வேற்றுமை இல்லை.


22. உலை கொதித்த பின்பே அரிசியைப் போட்டுச் சோறாக்க வேண்டும்.

 பாலியல் தொந்தரவால் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

  முழு மனத்துடன் உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம் என்று கூறினார்.


23. ஒருவர் ஆற்றங்கரையிலோ சோலையிலோ உலவுதல் வேண்டும்.

 உளவுத்துறையின் எச்சரிக்கைப்படி பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

        உயர்கல்வி படித்தாலும், அவர் உழவுத் தொழிலை மறக்கவில்லை.


24. எல் எழக்கண்டதும் தாமரை மலர்ந்தது. 

       எள்ளில் இருந்துதான் எண்ணெய் எடுக்க முடியும்.


25. ஒலி மாசு ஏற்படா வகையில் தேர்தல் பிரசாரம் நடைபெற வேண்டினார்.

   இருளில் தோன்றிய ஒளியைப் போல் அவனது உள்ளத்தில் நம்பிக்கை தோன்றியது.


26. குளவிக்கூட்டைக் கல்லெறிந்து கலைத்தான். 

        திருவள்ளுவர் கள் உண்ணுவதைக் கண்டித்துப் பேசியுள்ளார்.


27. காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது என்பதனை நாம் உணரவேண்டும். 

       கதிரவன் தோன்றியதால் காளம் என்னும் இருள் நீங்கியது.


28. மாதவிக்கு அறுபத்து நான்கு கலைகளும் தெரியும். 

  புல்பூண்டு முதலிய களைகள் நீங்கினால் நெற்பயிர் நன்றாக வளரும். 

        கழைக் கூத்தாடிக்குக் காசு கொடுத்தான்.


29. வள்ளலைச் சந்தித்தபின் புலவரின் கலி நீங்கியது. 

       ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியை உலகமே கண்டுகளித்தது.

      கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாக இருந்தது. 


30. காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு. 

         காளியின் இன்னொரு பெயர் கொற்றவை ஆகும்.

         சீர்காழி கோவிந்தராஜன் திரைப்பாடல்களையும் பாடியுள்ளார்.


31. பழங்காலத் தமிழர்கள் ஜன்னலைக் காலதர் என்று அழைத்தனர் (கால்-காற்று; அதர் - வழி) 

       வண்ணான் வீட்டருகே கழுதை காள் காள் எனக் கத்தியது.


32. கணக்குத் தேர்வை நினைத்தாலே எனக்குக் கிலியாக இருக் கிறது எனறான். 

       கிளிப்பிள்ளைப் போல் சொன்னதையே சொல்லாதே என்றார். 

    தனக்கு வந்த மொட்டைக் கடிதாசியை நான்காகக் கிழித்து எறிந் தாள்.


33. தந்தையும் தாயும் கூடிக் குலவியது இந்நாடே என்றார் பாரதியார்.    

      குளவிக் கடிக்குச் சுண்ணாம்பைத் தடவலாமா? எனக் கேட்டான்.

      அருள் என்பதனை அன்பு ஈனும் குழவி என்றார் திருவள்ளுவர்.


34. சீத்தலைச் சாத்தனார் கூல வாணிகம் செய்துள்ளார். 

  குப்பைக் கூளங்களை அகற்றும்படி மாநகரத் தந்தை (மேயர்) ஆணையிட்டார். 

      

35. காளிக்குக் கூளி கூறியது என்ன? 

      தரையில் விழுந்த கோலிகள் உருண்டு ஓடின. 

      வேலை செய்யாமல் உண்டு கொழு.


36. சரபோஜி மன்னரின் கொளு மண்டபம் கலைநயத்துடன் இருக்கிறது. 

           கொலு இல்லாத கலப்பையை ஒதுக்கி வைத்தான்.


37. சூல் கொண்ட மேகம் மழை பொழிந்தது. 

 அர்ச்சுனனை வெல்வேன் என்று அவமதிக்கப்பட்ட கர்ணன் சூளுரைத்தான். 

     நின்னோடு சூழ்வ தோழி (கலித்தொகை)


38. தலைக்கு இத்தனை மாங்கனிகள் எனக் கொடுத்தார். 

  பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிராக இருக்கும் தளைகளை நீக்கவேண்டும் எனப் பேசினார். 

 இலை தழைகளைப் பறித்து மாடு கன்றுகளுக்கு உண்ணக் கொடுத்தான்.


39. தாலம் தொடும் அளவுக்கு மாடமாளிகையும் கூட கோபுரமும் இருந்தன.

        அவள் சொன்னதற்கெல்லாம் தாளம் போட்டான். 

        தாழம்பூச் செடியில் பாம்பு இருந்தது.


40. தாலாட்டுப் பாடிக் குழந்தையைத் தூங்க வைத்தாள். 

    இறைவனது தாளை வணங்குபவர்கள் நற்கதி அடைவார்கள் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

        தாழ்ப்பாள் போட்டுள்ளதால் கதவைத் தட்டினாள்.


All these lessons have been duly verified by Dr. M. Sheih Abdul Kadir Maricar, Assistant Professor, Department of Tamil, The New College (Autonomous), Chennai -14.