மழைத்

துளிர்த்த புற்கள்

நுனி கரண்டும் மாடாடுகள்

மலர்த்தும் மரஞ்செடிகள்

பிரண்டையில் அமரும் ஊசித்தட்டான்

தாழைப்புதரொளியும் காடைகள்

செங்கற்சூளை நரி பொந்துகள்

மடைவரப்பில் மடையான்கள்

தொட்டாற்சிணுங்கிகள்

கரையான் புற்றுகள்

ஆடுதொடா செடிக்குற்றுகள்

காரைப்புதர்கள்.

உயிர்ப்புடன் உலவிய

தன் சிறு நிலத்தில்

ஆழ்ந்த கனவினூடே..

புறவழிச்சாலை காரின்

ஒலிப்பான் சப்தத்தில் விழித்தவனுக்கு

அதன் பிறகு உறக்கமில்லை.